சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் 19 ஆண்டு நிறைவு விழா
செப்டம்பர் 11, 2025சிவில் பாதுகாப்புத் திணைக்களம் (CSD) நேற்று (செப்டம்பர் 10) மிஹிந்தலையில் உள்ள சிவில் பாதுகாப்புப் படை நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் அதன் 19வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை CSD யின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு) வரவேற்றார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், 2006 செப்டம்பர் 13 அன்று வர்த்தமானி எண் 1462/20 இன் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ஊர்காவல் சேவையாக ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து, குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான பயங்கரவாத மோதலின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.
மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்த வீரார்கனைகள் மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கு இந்த விழாவின் போது அஞ்சலி செலுத்தப்பட்டதது. இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், யுத்தத்தின் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முக்கிய பங்களிப்பையும், போருக்குப் பிந்தைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் தொடர்ச்சியான சேவையையும் பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்துடன் அவர்களின் அர்பணிப்புமிக்க சேவைக்காக ஊக்கப்படுத்தினார். அவர்களின் நலனுக்கான அமைச்சின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிகழ்வில், மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி வண. தர்மரதன தேரர், உட்பட அனைத்து மத முக்கியஸ்தர்கள், சிவில் பாதுகாப்புப் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார (ஓய்வு) மற்றும் சிவில் பாதுகாப்புப் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.