நிலச்சரிவு குறைப்பு தொடர்பான 6வது PSC கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் நடந்தது
செப்டம்பர் 12, 2025தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயல்படுத்தும் நிலச்சரிவு பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்ட(RLVMMP) வழிகாட்டுதல் குழுவின் (PSC ) , 6வது கூட்டம் இன்று (செப்டம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
PSC இன் தலைவரான, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாப்பதில் நிலச்சரிவு குறைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் இதன்போது எடுத்துரைத்தார். இந்த முக்கியமான தேசிய முயற்சியின் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
இத்திட்டம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்கிய NBRO இன் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, பங்குதாரர் பிரதிநிதிகளிடமிருந்து PSC க்கு கிடைக்கும் உள்ளீடுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வ பரிந்துரைகளை உருவாக்குவதில் இந்த பங்களிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
RLVMMP இன் திட்ட இயக்குநர் பொறியாளர் விராஜ் டயஸ், திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திட்ட முன்னேற்றம் மற்றும் முன்னறிவிப்புகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பயன்பாடு, முன்னுரிமை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், திட்ட முடிவு கட்டமைப்பு மற்றும் பங்குதாரர் ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. திட்ட செயல்படுத்தலுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல், சமூக, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சமூக விழிப்புணர்வுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலதிக செயலாளர் திரு. K.G. தர்மதிலகே மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) திரு. W.W.S . மங்கள உள்ளிட்ட முக்கிய அரச பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்குபற்றினர்.