இலங்கை கடற்படை 12வது Galle Dialogue International Maritime Conference
மாநாட்டை நடத்துகிறது

செப்டம்பர் 16, 2025

இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் 12வது “Galle Dialogue International Maritime Conference” மாநாடு 2025 இம்மாதம் (செப்டம்பர்) 24 மற்றும் 25 திகதிகளில் வெலிசரை 'Wave n' Lake' கடற்படை மண்டபத்தில் நடைபெறும்.

இவ்வாண்டு இம்மாநாடு “Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறும். அத்துடன் ஐந்து முக்கிய தலைப்புகளின் கீழ்: கடல்சார் சூழல், கடல்சார் நிர்வாகம், கடல்சார் பொருளாதாரம், நிலைத்தன்மை மற்றும் சுத்தமான இந்து சமுத்திரத்தை பேணுதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும். 

இம்மாநாட்டில் 36 நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட கடல்சார் நிபுணர்கள் உட்பட 14க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாடு கடல்சார் நிலைத்தன்மை, வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாட கலம் அமைத்துக் கொடுக்கும் கொடுக்கிறது என்பது விசேட அம்சமாகும். 

இம்மாநாடு தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்றது.