பாதுகாப்புச் செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
செப்டம்பர் 25, 2025பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப்டம்பர் 25) சந்தித்த இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) பிரதிநிதிகள் குழுவினால் பொப்பி மலர் ஒன்று அணிவிக்கப்பட்டது.
SLESA தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இன்று காலை பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது. இதன் போது SLESA பொப்பி குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, பாதுகாப்புச் செயலாளருக்கு பொப்பி மலரை அணிவித்தார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் SLESA பிரதிநிதிகளுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
பொப்பி தினம், முதலாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து பொதுநலவாய நாடுகளில் கடமையின் போது உயிர்நீத்த ஆயுதப்படை வீரர்களை நினைவுகூறுமுகமாக வருடாந்தம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.