மங்கோலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
செப்டம்பர் 25, 2025மங்கோலிய தூதகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Odsuren Zayat, இன்று (செப்டம்பர் 25) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகராவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பிரதி அமைச்சர், Colonel Odsuren Zayat தை அன்புடன் வரவேற்று அவருடன் ஒரு சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
Colonel Odsuren Zayat இதற்கு முன் (செப்டம்பர் 23) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார். பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்புகள் இலங்கைக்கும் மங்கோலியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.