பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
செப்டம்பர் 25, 2025இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு Rémi Lambert இன்று (செப்டம்பர் 25) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்தார்.
பிரான்ஸ் தூதரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர், அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடல், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கடல்சார் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பர உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ், இலங்கைக்கு அளித்துள்ள உதவிக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்ததுடன் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையம் எடுத்துரைத்தார்.