சவுதி அரேபிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

செப்டம்பர் 26, 2025

புது தில்லி மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Captain (Navy) Hussain Othman Al Kowaileet, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) இன்று (செப்டம்பர் 26) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வருகை தந்த சவுதி அரேபிய பாதுகாப்பு ஆலோசகரை, பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றதுடன் அவருடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நல்லுறவையம் நினைவு கூர்ந்தனர்.