கொழும்பில் ஜெர்மன் ஒற்றுமை தினம் 2025 கொண்டாடப்பட்டது

செப்டம்பர் 30, 2025

இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின்   ஏட்பாட்டில்   '​​ஜெர்மன் ஒற்றுமை தினம்' கொழும்பு  ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை (செப்டம்பர் 30) கொண்டாடப்பட்டது. ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில்  ஜெர்மன் மறு ஒன்றிணைப்பின் 34 வது ஆண்டு நிறைவைக் இந்த நிகழ்வு குறிக்கிறது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான வலுவான உறவை  பிரதிபலிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் தூதரக அதிகாரிகள் உட்பட பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள் இதில்  கலந்து கொண்டனர்.

தனது வரவேற்பு உரையில், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் அதிமேதகு Dr பீலிக்ஸ் நியூமன், பிரதம விருந்தினரையும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு தசாப்த கால இராஜதந்திர உறவுகளை  எடுத்துரைத்த தூதுவர்  பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால இருதரப்பு கூட்டாண்மையை வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நீடித்த மற்றும் வளர்ந்து வரும் உறவை மீண்டும் உறுதிப்படுத்த இந்த நிகழ்வு ஒரு தாமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.