பேரை ஏரியில் நீர் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
ஒக்டோபர் 03, 2025கொழும்பு பேரை ஏரியில் நீர் விமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று காலை பேரை ஏரியில் நடந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை வலுப்படுத்த பேரை ஏரியின் நீர் விமான தரிப்பு மேடை புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டும் பயன்படுத்தப்படுவது ஒரு முக்கிய மைல்களாக குறிப்பிடலாம். இன்று காலை கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் பேரை ஏரியில் தரையிறங்கியது. இது இலங்கையின் பிரதான நகரங்களுக்கிடையேயான வான்வழி போக்குவரத்தின் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. Saffron Aviation (Pvt) Ltd. நிறுவனத்தால் இயக்கப்படும் Cinnamon Air விமானம் கொழும்பு நகர மையத்துடன் நாட்டிலுள்ள முக்கிய இடங்களை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு தொடர்பான விடயங்களினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான செயட்பாடுகள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கால விமான சேவைகள் தடையின்றி தொடர முடியும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆண்டு (2025) ஜூன் மாதம், பாதுகாப்பு அமைச்சில் இந்தத் திட்டம் குறித்த தொடர்புடைய தரப்பினர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது, இதன் போது இலங்கையின் சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதில் உள்நாட்டு விமானப் பயணத்தின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் இந்த முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு நிலையான ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ஜனித கொடித்துவக்கு, சுற்றுலா துறை பிரதி அமைச்சர் கௌரவ (Prof) ருவன் ரணசிங்க, John Keells Holdings தலைவர் திரு. கிரிஷான் பாலேந்திரா, சிரேஷ்ட இலங்கை விமானப்படை அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.