2025 ஆண்டின் 3வது காலாண்டிட்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

ஒக்டோபர் 03, 2025

2025 ஆம் ஆண்டின் 3வது காலாண்டிற்கான கணைக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

முப்படைகள் மற்றும் Rakna Arakshaka Lanka Ltd. (RALL) தொடர்பான முதலாம் கூட்டம் அக்டோபர் 1 ஆம் திகதி நடைபெற்றது. Ranaviru Seva Authority ( (RSA), Civil Security Department (CSD) மற்றும் General Sir John Kotelawala Defence University Hospital ஆகியவை தொடர்பன கூட்டம் இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது.

இந்த கூட்டங்களில் இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள், கடற்படைத் தலைமை அதிகாரி, பிரதி கணக்காய்வாளர் நாயகம், தலைமை உள்ளக கணக்காய்வாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தலைமை நிதி அதிகாரி (கொள்முதல் மற்றும் திட்டம்) அமைச்சின் கீழ் உள்ள நிறுவன தலைவர்கள் மற்றும் முப்படை மற்றும் சிவில் நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டங்களில் நிதி மேலாண்மை, கணக்காய்வு அவதானிப்புகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அந்தந்த நிறுவனங்கன் அனைத்து நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் நல்லாட்சியின் முக்கியத்துவத்தை குழுவினால் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. 

நிறுவன மேற்பார்வையை வலுப்படுத்துவதற்கும், விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு ஒரு முக்கிய அமைப்பாக தொடர்ந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.