இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்
ஒக்டோபர் 08, 2025இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 7) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேட்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அங்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார்.
வருகை தந்த பிரதி அமைச்சரை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட வரவேற்றார். இந்த விஜயத்தின் போது, பிரதிஅமைச்சர் கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடளில் ஈடுபட்டார். இதன்போது முக்கிய செயல்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். அத்துடன் கடற்படை செயல்பாட்டு அறை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் (MRCC) மற்றும் தகவல் இணைவு மையம் (IFC) ஆகியவற்றின் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜெயசேகர, கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் தேசிய பாதுகாப்பைப் நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்த வீரம் மிக்க நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
அரசாங்கத்தின் தேசிய நலன்களை முன்னேற்றுவதில் முக்கியத்துவத்தை அதன் அங்கீகரிக்கப்பட்ட OBST பாதுகாப்பு குழு நடவடிக்கைகள் மூலம் கடற்படையின் மூலோபாய பங்களிப்பை அவர் மேலும் பாராட்டினார். முக்கிய கொள்கை முன்னுரிமைகளை எடுத்துரைத்த பிரதி அமைச்சர், பொறுப்புக்கூறலை நிலைநிறுத்தவும், ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கடற்படையின் செயல்பாட்டுத் திறன்களையும் தொழில்முறையையும் வலுப்படுத்த கடல்சார் கள விழிப்புணர்வை (MDA) மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டி, 'கட்டளைப் பொறுப்பு' என்ற முக்கியக் கொள்கையை வலியுறுத்தினார். அனைத்துத் தலைவர்களும் தங்கள் கடமைகளைச் செயல்படுத்துவதில் நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரங்களைப் பேணுமாறும் வலியுறுத்தினார்.