பாகிஸ்தான் NRTC தூதுக்குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது

ஒக்டோபர் 08, 2025

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (NRTC) தூதுக்குழு இன்று (அக்டோபர் 08) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது, ​ இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் சார்ந்த விடயங்கள் மற்றும் பாதுகாப்பு தொழிநுட்ப துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் சுமூக கலந்துரையாடளில் ஈடுபட்டனர்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.