சந்தஹிரு சேய ஸ்தூபியை அட்டமஸ்தானத்திற்கு பொறுப்பளிப்பது குறித்த முதற்கட்ட கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெற்றது
ஒக்டோபர் 10, 2025சந்தஹிரு சேய ஸ்தூபியை அட்டமஸ்தானத்திற்கு பொறுப்பளிப்பது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (அக்டோபர் 09), அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியவின் பிரதான சங்கநாயக்கர் சிராஸ்ரபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் மற்றும் ருவன்வெலிசேய விகாரையின் விகாராதிபதி, ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிராஸ்ரபதி பண்டித்த வணக்கத்திற்குரிய ஈத்தலவெட்டுனவெவே ஞானதிலக தேரர்களின் தலைமையில் அனுராதபுரத்தில் நடைபெற்றது.
இதன் ஏற்பாடு தொடர்பான முதல்கட்ட கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) புத்த சாசன அமைச்சின் ஆணையாளர் நாயகம் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலறும் கலந்துக் கொண்டனர்.
பயங்கரவாத மோதலின் போது தேசத்தின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த முப்படைகள் மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இத்தூபியின் கட்டுமான பணிகள் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஸ்தூபி தேசத்தின் நன்றியுணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையின் நீடித்த அடையாளமாக கருதப்பட்டுகிறது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்கு முப்படைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பௌத்த பக்தர்கள் ஆதரவு அளித்தனர். ஸ்தூபிக்குள் வைக்கப்பட்டுள்ள புனித நினைவுச் சின்னங்கள் அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தி நிட்கின்றது.
கூட்டத்தின் போது, கையளிப்பு விழா, பாதுகாப்பு, மத அனுஷ்டானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிப்பது உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், ஸ்தூபியை கட்டி முடிக்க பங்களித்த அனைத்து தரப்பினரின் முயற்சிகளையும் பாராட்டினார் அத்துடன் இது தொடர்பில் அமைச்சின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.