பாகிஸ்தான் NRTC தூதுக்குழு பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தது

ஒக்டோபர் 10, 2025

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (NRTC) தூதுக்குழு ஒன்று இன்று (அக்டோபர் 10) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.

இந்த நல்லுறவு கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.