மிஹின்து செத் மெதுரவிற்கான விஜயத்தின் போது மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
ஒக்டோபர் 15, 2025பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (அக்டோபர் 15) மிஹின்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயம் மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களின் நலன் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது.
பிரதி அமைச்சரை மிஹின்து செத் மெதுரவின் கட்டளை தளபதி பிரிகேடியர் P.D.N.I. அல்மெய்டா அன்புடன் வரவேற்றார்.
இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட மிஹின்து செத் மெதுர, மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களுக்கான ஒரு அர்ப்பணிப்புள்ள நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு மையமாக செயல்படுகிறது. இது நாட்டிற்காக சேவை செய்யும் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான யுத்த வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குகிறது. இங்கு மருத்துவ ஆலோசனைகள், மேம்பட்ட செயற்கை மற்றும் எலும்பியல் மருத்துவ ஆதரவு, பிசியோதெரப்பி மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விஜயத்தின் போது, மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அங்குள்ள யுத்த வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடினார். அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் தியாகம் மிக்க சேவை தொடர்பில் அவர்களுடன் கதைக்க நேரம் ஒதுக்கிக் கொண்டார். இந் நிலையம், அவர்களுக்கு கண்ணியம், குணப்படுத்துதல் மற்றும் விரிவான பராமரிப்பின் சரணாலயமாக இருப்பதை தொடர்ந்தும் நிலைநிறுத்த சிகிச்சைபெறுபவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சகத்தின் தொடர்ச்சியான ஆதரவை அவர் உறுதியளித்தார்.
இதன் போது மறுவாழ்வு செயல்முறை மேற்பார்வை நிலையத்தில் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் விரிவான கலந்துரையாடல்களை மேட்கொண்டார். தற்போதைய செயல்பாட்டுத் தரங்களை மதிப்பாய்வு செய்வதும், வசதிகள் மற்றும் சேவைகளில் தொடர்ச்சியான மேம்பாடுகளைத் திட்டமிடுவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடல்களின் போது ஆராயப்பட்டது.
பிரதி அமைச்சரின் மிஹின்து செத் மெதுரவிற்கான இவ்விஜயம், யுத்த வீரர்களுக்கான நாட்டில் கடமை போர்க்களத்திற்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இத்தகைய நீடித்த பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் மூலம், மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களின் துணிச்சலும் தியாகமும் மிகுந்த கண்ணியம், இரக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுடன் மதிக்கப்படுவதை பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்கிறது.