அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் DSSC தூதுக்குழு
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது
ஒக்டோபர் 21, 2025
கேர்ணல் Brandon Wood தலைமையிலான அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியின் (DSSC) தூதுக்குழு, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தது.
அன்பான வரவேட்பை தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் வருகை தந்த அவுஸ்திரேலிய தூதுக்குழுவுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் Amanda Johnston (DA) ஆகியோரும இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.