--> -->

புதிய இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 08, 2021

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பது இதுவே முதற்தடவையாகும்.

இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.