தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு செயலாளர் விரிவுரை நிகழ்த்தினார்
நவம்பர் 06, 2025பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 6) கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) மாணவர் அதிகாரிகளுக்கு விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்கவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர் இந்த வருடாந்த விரிவுரையை நிகழ்த்தினார். கல்லூரிக்கு இன்று காலை வருகை தந்தபோது பாதுகாப்பு செயலாளரை அதன் கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு விரிவுரை ஆற்றிய பாதுகாப்பு செயலாளர், தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) பாதுகாப்பு சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் முழு வடிவத்தையும் புரிந்துகொள்ளும் தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இதன் பயிற்சி வெறும் கல்வி சார்ந்தது மட்டுமல்ல, மாற்றத்தையும் ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டது என்றார். இலங்கையின் அனுபவத்தில் பாதுகாப்பு என்பது ஒன்றோடொன்று இணைந்த கருத்து என்பதைக் எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். "உண்மையான மூலோபாய தலைமைத்துவம் என்பது எதிர்காலத்தை கணிப்பது பற்றியது அல்ல; அதற்குத் தயாராக இருப்பது பற்றியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விரிவுரை NDCன் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC), தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும், தேசிய பாதுகாப்பு, அரசமைப்பு, இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் மூலோபாய சிந்தனையாளர்களாகச் செயல்படக்கூடிய அறிவை வழங்குவதற்கும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
இந்நிகழ்வின் போது NDC கட்டளை தளபதி பாதுகாப்புச் செயலாளருக்கு ஒரு நினைவுப் சின்னத்தையும் வழங்கினார்.