சட்டவிரோத மீன்பிடித்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் எடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது

நவம்பர் 13, 2025

இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான உத்திகளை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 11 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆகியோர் தலைமை தாங்கினர். 

தடுப்பு நடவடிக்கைகள், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களால் இலங்கையின் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அங்கீகரிக்கப்படாத வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்துதல் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் கடத்தல் போன்ற மீன்பிடி அல்லாத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிரதேசங்களுக்கும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்காக இரண்டாம் நிலை உள்ளூர் மீன்பிடிக் கப்பல்கள் தங்கள் கப்பல் கண்காணிப்பு அமைப்பை (VMS) வேண்டுமென்றே முடக்குவது குறித்தும் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கடற்படைத் தளபதி, பொலிஸ்மா அதிபர், பணிப்பாளர் நாயகம், இலங்கை கடலோரக் பாதுகாப்பு திணைக்களம், பணிப்பாளர் நாயகம், இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு (TRCSL) பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகம் (PNB) மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நிலையான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இது தொடர்பில் இதற்கு முன் நடந்த உயர்மட்டக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த அமர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.