காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு குறித்த 9வது ABU
ஊடக உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது
நவம்பர் 25, 2025
9வது ABU காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு ஊடக உச்சி மாநாடு (CADP 2025) இன்று (நவம்பர் 25) Mount Lavinia ஹோட்டலில் ஆரம்பமாகியது. ஊடகங்கள் மூலம் காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்த மூன்று நாள் நிகழ்வில் பிராந்திய ஊடகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனர்த்த-ஆபத்து நிபுணர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
“Building Resilience Through Media: For a Cleaner, Greener, and Safer Tomorrow." என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ சபாநாயகர் (Dr) ஜகத் விக்ரமரத்ன கலந்து கொண்டார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கௌரவ விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகால எச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் காலநிலை தொடர்பான சவால்களுக்குத் தயாராக சமூகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஊடகவியலாளர்களின் முக்கிய பங்கை இந்த உச்சிமாநாடு எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுடன் இணைந்து ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு ஒன்றியத்தால் (ABU) ஏற்பாடு செய்யப்பட்ட CADP 2025, மாநாடு அனர்த்த-தயார்நிலை அறிக்கையிடலை மேம்படுத்துதல், சமூகம் சார்ந்த காலநிலை தொடர்பை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் Dr நளிந்த ஜயதிஸ்ஸ, ABU செயலாளர் நாயகம் அகமத் நதீம், SLRC தலைவர் கிஹான் டி சில்வா, SLRC பணிப்பாளர் நாயகம் மனோஜ நதீஷன அமரசிங்க மற்றும் பல சிறப்பு அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.