மிகவும் மோசமான காலநிலைக்கு மத்தியில் இராணுவத்தினர்
மீட்பு நடவடிக்கைகளை மேட்கொண்டனர்

நவம்பர் 28, 2025

கைலகொட முதியோர் இல்லத்தில் இருந்து 38 முதியவர்களை இராணுவத்தினர் மீட்டு, தொடர்ச்சியான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உதவிக்காக அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் A 26 பாதையின் ரம்புக்வெல்ல பகுதியில் உட்பட்ட, தடையை சரிப்படுத்த, பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் (RDA) இணைந்து பணியாற்றிய இராணுவத்தினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி பாதையை மீண்டும் திறந்து சாதாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு திறந்து வைத்தனர்.

இதற்கிடையில், 211 படைப்பிரிவின் படையினர், 2025 நவம்பர் 26 அன்று பெய்த கனமழை காரணமாக ஹொரவபொத்தானை ககுல்படிதிகிலிய குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்ய அதிகாரிகளுக்கு அவசர உதவியை வழங்கினர். அவர்களின் உடனடி தலையீட்டால் குளக்கட்டை வலுப்படுத்த முடிந்ததுடன் மேலும் நீர் வெளியேற்றமும் தடுக்கப்பட்டது. அத்துடன் மேலதிக மெத்தனால் சரிசெய்யப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான பாசன நீர் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டது.