நிகவரட்டிய மற்றும் தொம்பையில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர்
இலங்கை விமானப் படைவினரால் மீட்பு
நவம்பர் 29, 2025
இலங்கை விமானப் படையினர், இன்று காலை (29 நவம்பர்) இரண்டு அவசர மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
பாலாவி விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட பெல்-412 ஹெலிகொப்டர், நிகவரட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பிக்கு உள்ளிட்ட நால்வரை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல், ரத்மலான விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட மற்றொரு பெல்-412 ஹெலிகொப்டர், தொம்பை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒருவரை பாதுகாப்பாக மீட்டது.