மொனராகலை மாவட்டத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியான அனர்த்த நிவாரண
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

நவம்பர் 29, 2025

பாதுகாப்புப் படைகள் (மத்திய) மற்றும் 12வது காலாட்படை படையினர் மொனராகலை மாவட்டம் முழுவதும் வெல்ல நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மெதகம பிரதேச செயலகத்தின் கந்தவின்ன பகுதியில் 18வது படைப் படைப் பிரிவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை மீட்டனர். வெளியேற்றப்பட்ட அனைவரும் மெதகம பிட்டதெனிய ஆரம்ப பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கடுமையான மழை காரணமாக கும்புக்கன் ஓயா அணைக்கட்டில் குப்பைகள் சிக்கி அதன் நீர் ஓட்டத்தைத் தடுத்ததையடுத்து 121வது காலாட்படை படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினர் அவற்றை அகற்றி, நீர் ஓட்டத்தை சீர் செய்தனர். அத்துடன் மற்றொரு குழு, மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி அணைக்கட்டின் அரித்துச் செல்லப்பட்ட பகுதியை சரிசெய்தனர். 

இதற்கிடையில், 121வது காலாட்படை படைப்பிரிவின் மற்றொரு குழு, 3வது மைல் கல்லுக்கு அருகில் கும்புக்கன் ஓயா கால்வாயில் விழுந்த மரங்களை அகற்றியது. மோசமான வானிலை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இராணுவத்தினர் தொடர்ந்து அத்தியாவசிய அவசர உதவிகளை வழங்கி வருகின்றனர்.