வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,300 க்கும் அதிகமான மக்களுக்கு இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவு உதவி

நவம்பர் 29, 2025

இலங்கை கடற்படை நாடு முழுவதும் அனர்த்த நிவாரணப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. 

 இன்று (நவம்பர் 29), கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் படையினர் திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,310 நபர்களுக்கு அளித்துள்ளனர். இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 69 பேர் மீட்கப்பட்டதுடன் மற்றும் 1,241 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

கிண்ணியா, மால் பச்சேனை, கந்தளாய், மூதூர், சாபி நகர், கலா ஓயா, கோமரன்கடவலை, ரயில் பாலம், கல்லேல்ல மற்றும் அளுத்கம போகமுவ உள்ளிட்ட பல இடங்களில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.