பதுளை மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான
இடங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்

நவம்பர் 30, 2025

பதுளை மாவட்டத்தில் மோசமான  வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் தொடர்பில் தேடிப்பார்த்து  மதிப்பாய்வு செய்வதற்கும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) விஜயம் செய்தார். 

நேற்று (நவம்பர் 29), பிரதி அமைச்சர் ஹப்புத்தளை கிலெநோர் தமிழ் மகா வித்யாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு மையம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள போவைஸ் வித்யாலயத்திற்கு விஜயம்  செய்தார்.  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார் அத்துடன், அத்தியாவசிய சேவைகள், தங்குமிடம், மருத்துவ உதவி, உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட உடனடித் தேவைகள் தொடர்பில் ஆய்வு செய்ததுடன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள   குடும்பங்களின் நலன் தொடர்பிலும் விசாரித்தார். 

கடந்த நவம்பர் 28 அன்று , பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்  தங்கவைக்கப்பட்டுள்ள  பதுளை முத்தியங்கனை விகாரை, பதுளை நகர முஸ்லிம் பள்ளிவாசல்  மற்றும் நெலும்கமுவ மகா வித்யாலயத்திற்கும் விஜயம் செய்தார். 

தற்போது மேட்கொள்ளப்பட்டு வரும்  நிவாரண நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காகவும்  கெப்பெட்டிப்பொலையில் நிகழ்ந்த நிலச்சரிவு உட்பட்ட இடத்தையும்  பிரதி அமைச்சர் பார்வையிட்டார். அத்துடன் அங்கு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ குழுக்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கையை வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சு  அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு தடையற்ற ஆதரவை வழங்குவதற்கும், திறமையான, நாடளாவிய அனர்த்த மீட்பு முறையைப் பராமரிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது ஏன்பது குறிப்பிடத்தக்கது.