அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய இராணுவ மருத்துவக்
குழு இலங்கைக்கு வந்தது
டிசம்பர் 03, 2025
கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக முழுமையாக செயல்படும் ஒரு இந்திய இராணுவ கள மருத்துவமனை, நேற்று (02 டிசம்பர்) இலங்கைக்கு வந்தது.
இலங்கை இராணுவத்தின் அட்ஜூடன்ட் ஜெனரல் மேஜர் ஜெனரல் K.T.P. De Silva மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மந்தீப் சிங் நெகி ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இந்திய குழுவினரை வரவேற்றனர்.
மொத்தம் 73 உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவக் குழு மஹியங்கனை பகுதியில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை, அவசர பராமரிப்பு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.