ஜெர்மன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

டிசம்பர் 05, 2025

ஜெர்மன் கூட்டாட்சி குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel, இன்று (டிசம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
 
கேணல் மெர்க்கலுடன் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Commander Marco Hellgrewe வும் உடனிருந்தார்.
 
பாதுகாப்பு செயலாளர் ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகளை அன்புடன் வரவேற்று அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.