பாதுகாப்பு செயலாளர் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண
விநியோக வசதிகளை ஆய்வு செய்தார்

டிசம்பர் 07, 2025

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 07) தேசிய அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நிவாரண நிலையத்தின் (DMC) அழைப்பு மையம் மற்றும் தேசிய அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு விஜயம் செய்தார். 

இந்த விஜயத்தின் போது, ​​பாதுகாப்பு செயலாளர் இரு வசதிகளின் செயல்பாடுகளையும் அவதாணித்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுடன் கதைத்து, சேவையின் போது அவர்கள் எதிகொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் , தற்போதைய நிவாரண நடவடிக்கைகளின் போது அவசரகால தொடர்பு மற்றும் விடையளிப்பு வசதியைநிர்வகிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையையும் பாராட்டினார். தேசிய நிவாரண முயற்சிக்கு ஆதரவாக அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனுடன் தங்கள் கடமைகளைத் தொடருமாறு பாதுகாப்பு செயலாளர் அவர்களை கேட்டுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர், தேசிய அனர்த்த மீட்பு சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சிய சாலை வளாகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மேட்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோக செயல்முறை, மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புதல் போன்ற செயல்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார். 

நியாயமான மற்றும் பொறுப்புணர்வு மிக்க நிவாரண விநியோக நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர், அனைத்து விநியோக நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும் திறம்படவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் இதனால் தேவைப்படும் சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார். 

பாதுகாப்பு செயலாளர், தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை வீரர்களின் நலன்புரி ஏற்பாடுகளையும் ஆய்வு செய்ததுடன் நிவாரண நடவடிக்கைகளுக்கு அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். மேலும் அர்ப்பணிப்புடன் தங்கள் சேவையைத் தொடர அவர்களை ஊக்குவித்தார்.