மீட்புப் பணிகளுக்கு உதவ மற்றொரு IAF MI-17V5 ஹெலிகொப்டர் இலங்கைக்கு வந்தது

டிசம்பர் 10, 2025

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ மற்றொரு இந்திய விமானப்படை (IAF) Mi-17V5 ஹெலிகொப்டர் நேற்று (டிசம்பர் 09) நாட்டிற்கு வந்தடைந்ததாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவிக்கிறது.
 
விங் கமாண்டர் நாகேஷ் குமார் தலைமையில் வந்திறங்கிய இந்த விமானம் 11 பேர் கொண்ட ஒரு குழுவையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பொருட்களையும் கொண்டு வந்துள்ளது.
 
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் SLAF மற்றும் IAF இடையேயான கூட்டு முயற்சிகளை இது மேலும் வலுப்படுத்தும். இலங்கைக்கு வந்த குழுவினரை வரவேற்க விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சமூகமளித்திருந்தனர்.