பாதுகாப்பு செயலாளர் DSCSC இல் விரிவுரை நிகழ்த்தினார்

டிசம்பர் 10, 2025

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC)பாடநெறி எண் 19 இன் பங்கேற்பாளர்களுக்கு விரிவுரை நிகழ்த்தினார்.
 
இன்று காலை மாகொலையில் உள்ள DSCSC க்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளரை DSCSC இன் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த ஹேவகே வரவேற்றார்.
 
பாடநெறி எண் 19 இல் 123 உள்நாட்டு மற்றும் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உள்ளடங்குவர்.
 
தனதுரையில், எதிர்கால இராணுவத் தலைவர்களை வடிவமைப்பதில் DSCSC இன் பங்கைப் பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார் அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு நிலப்பரப்பின் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் எடுத்துரைத்தார். டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட சூழ்நிலை விழிப்புணர்வு மூலம் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதன் மூலம் நுணுக்கமான, மிகவும் திறமையான மற்றும் நிலையான ஆயுதப்படைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
 
தொழில்நுட்ப முன்னேற்றம், கூட்டு நடவடிக்கைகள், இடைச்செயல்பாடு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றின் அவசியத்தையும் பாதுகாப்புச் செயலாளர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் ஆயுதப்படை அதிகாரிகள் புத்தாக்கம் மற்றும் மூலோபாய சிந்தனையைத் தழுவதையும் அவர் ஊக்குவிக்கிறார்.
 
இந்நிகழ்வில் DSCSC யின் சிரேஷ்ட அதிகாரிகள் பாடநெறி பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.