நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர் பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ள
நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தனர்
டிசம்பர் 10, 2025
கொழும்பு நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு அமைச்சுக்கு ஒரு தொகை வெள்ள நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தனர். கல்லூரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்து இவற்றை கையளித்தனர்.
"நாளந்தா சத்கார 2025" எனும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அன்பளிப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒரு கூட்டு முயற்சியாகும். நிவாரணப் பொருட்களில் உலர் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களும் அடங்கும்.
நாளந்தா கல்லூரியின் அதிபர் திரு. யு.டி. இரான் சம்பிக்க சில்வா, நாளந்தா பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகத் தலைவர் திரு மொஹான் குணதாச, நாளந்தா கல்லூரியின் ஜூனியர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. ஹேஷான் பாதுக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திரு. ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.