Platypus Link மற்றும் Texlin Global வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தன
டிசம்பர் 11, 2025Platypus Link (Pvt) Ltd மற்றும் Texlin Global (Pvt) Ltd நிறுவனங்கள் சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.
இந்த நன்கொடை இன்று (டிசம்பர் 11) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) கையளிக்கப்பட்டது.
நிறுவனத்தின் பொது முகாமையாளர் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) இன்று பாதுகாப்பு செயலாளரிடம் இந்த நன்கொடையை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.