பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவிற்கு வெள்ள
நிவாரண அன்பளிப்பு வழங்கப்பட்டது

டிசம்பர் 11, 2025

சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் உபயோகத்திற்காக ஓரு தொகை குழந்தை தொட்டில்கள் இன்று (11 டிசம்பர்) பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு (SVU) அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த குழந்தை தொட்டில்கள், கந்தளாய் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் உபயோகத்திற்காக அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், சேவா வனிதா பிரிவின் தலைவரான Dr. (திருமதி) ருவினி ரசிக்கா பெரேராவிடம் இந்த அன்பளிப்பு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

 Air Voice International (Pvt) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் H.B. நலின் ஹேரத், மற்றும் Diesel & Hydraulic Engineers (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் அகில சில்வா ஆகியோரினால் இவை கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.