ஹேலிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி, வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது
டிசம்பர் 12, 2025இலங்கையின் ஓரு முன்னணி கையுறை உற்பத்தியாளரான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி (டிபிஎல்), நிறுவனம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 பாதுகாப்பு கையுறைகளை நன்கொடையாக வழங்கியது.
ஹேலிஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மொஹான் பண்டித்தகே, டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி நிர்வாக இயக்குனர் புஷ்பிக ஜனதீரா ஆகியோர் இந்த நன்கொடையை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) கையளித்தனர். இந் நன்கொடை தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை ஆதரிப்பதில் தனியார் துறையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள், சுத்தம் செய்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாவனைக்கு இக்கையுறைகள் உபயோகிக்கப்படும். அத்துடன் நிவாரண நடவடிக்கைகளின் போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.
உலக சந்தைக்கு பாதுகாப்பு கையுறைகளை உற்பத்தி செய்யும் டிபிஎல் நிறுவனம், அனர்த்த மீட்புப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கையளிப்பு நிகழ்வின் போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் சமூகமளித்திருந்தார்.