இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதியில் இராணுவ படையினரின் உதவியுடன் நடைபெற்று வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு
டிசம்பர் 14, 2025இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, 2025 டிசம்பர் 13 மற்றும் 14ம் திகதிகளில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதிக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த இராணுவ தளபதியை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் வரவேற்றார்.
பின்னர், 22 வது காலாட் படைப்பிரிவின் செயற்பாட்டு அறையில் இப்பகுதியில் தற்போதைய செயற்பாட்டு மற்றும் மேம்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து இராணுவ தளபதிக்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியிடமிருந்து விளக்கமளிக்கபட்டது.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி நீலபொல பகுதிக்குச் சென்றதுடன் அங்கு 5 வது இலங்கை பீரங்கி படையணி, 9 வது விஜயபாகு படையணி மற்றும் 2 வது கஜபா படையணி மொத்தம் 110 படையினர் இராணுவத்தின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து இராணுவப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்லெல்ல பகுதியில் பொலன்னறுவை - மட்டக்களப்பு ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளையும் இராணுவத் தளபதி ஆய்வு செய்தார்.
திட்டத்தின் முன்னேற்றத்தைக் ஆய்வுசெய்த இராணுவத் தளபதி, படையினர் தங்கள் கடமைகளை மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தேசிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக படையினர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை அவர் பாராட்டினார்.
நன்றி - www.army.lk