DSCSC கல்லூரியின் பட்டமளிப்பு விழா நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது

டிசம்பர் 17, 2025

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) - பாடநெறி எண் 19 இன் பட்டமளிப்பு விழா நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், பிரதம மந்திரி கௌரவ Dr. ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
 
DSCSC பாடநெறி எண் 19 இலங்கை முப்படைகளைச் சேர்ந்த 123 அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ், சீனா, இந்தியா, மாலத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 26 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 149 பங்கேற்பாளர்களைக் உள்ளடக்கியுள்ளது. 

சிறந்த கல்வித் திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு பிரதம அதிதி சிறப்பு விருதுகளை வழங்கினார். அத்துடன் பிரதி அமைச்சரும் விருதுகளை வழங்கி வழங்கினார்.

பாடநெறியின் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையைக்கான (golden pen) விருது, லெப்டினன்ட் கமாண்டர் (S) SNWAMKW பண்டாராவுக்கு (SLN) வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கல்வி திறமை வெளிக்காட்டிய ஏனைய அதிகாரிகளுக்கு பிரதம அதிதியினால் விருதுகளும் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவும் (ஓய்வு), விருதுகளை வழங்கினார்.

முப்படை தளபதிகள், முன்னாள் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பட்டம் பெற்ற அதிகாரிகளின் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.