பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொதுமக்களுக்கான
விசேஷ உதவி மையம் ஸ்தாபிப்பு

டிசம்பர் 20, 2025

பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, விசேட பொதுமக்கள் உதவி மையம் (Public Assistance Helpdesk) ஒன்று எதிர்வரும் 2025 டிசம்பர் 21ஆம் திகதி முதல் காலி முகத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டவுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த உதவி மையம், முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் ஒருங்கிணைந்து நிறுவப்படுவதுடன், ஒன்றினைந்த, மற்றும் உடனடி சேவையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும்.

இது, பொதுமக்களுக்கான மையத் தொடர்பு நிலையமாக செயல்பட்டு, அவசர நிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் போது உடனடி உதவி, வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கும். இதன் மூலம் அந்தப் பகுதியில் பொதுப் பாதுகாப்பு, சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் விரைவான பதில் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும்.

பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு மேலதிகாமாக, மருத்துவ அவசர நிலைமைகளை கையாளவும் தேவையான போது முதலுதவி வழங்கவும், அந்தப் பகுதியில் அம்பியுலன்ஸ் சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, அவர்களுக்கு காலி முகத்திடல் பகுதியில் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் அமைதியான சூழலில் நேரத்தை கழிக்க உதவுவதற்கு உறுதி பூண்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக, பொதுமக்கள் உதவி மையம், அவசர ஒருங்கிணைப்பு, அம்பியுலன்ஸ் சேவைகள் மற்றும் பாதுகாப்பு உதவிக்கான தொடர்புகளுக்கு 0718595880 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.