பாங்கொல்லையில் உள்ள அபிமன்சல-3 இல் வெள்ளப் பாதிப்புகளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆய்வு செய்ய விஜயம் செய்தார்
டிசம்பர் 20, 2025பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மறுவாழ்வு மையத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சமீபத்தில் (டிசம்பர் ௧௪) அங்கு விஜயம் செய்தார்.
விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் நிலையத்தின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்ததுடன், பாதகமான வானிலையால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தால், யுத்தத்தில் காயமடைந்த யுத்த வீரர்களுக்காக நிறுவப்பட்ட ஒரு பிரத்யேக சிகிச்சை நிலையமான அபிமன்சல, அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், பிசியோதெரபி மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குகின்றது.
அனைத்து சூழ்நிலையிலும், இந்த வீரர்கள் பாதுகாப்பான மற்றும் அவர்களுக்குத் தகுதியான சிறப்பு கவனம், கண்ணியம் மற்றும் மரியாதையைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜயசேகர தெரிவித்தார். வெள்ள சேதம் குறித்த விரிவான மதிப்பாய்வின் போது, உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சேவை இடையூறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மதிப்பீடு செய்ய நிலையத்தின் நிர்வாகத்துடன் அவர் கலந்துரையாடினார். யுத்த வீரர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இந்நிலையம் அதன் முழு செயல்பாட்டு திறனையும் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தினார். நாட்டின் போர் வீரர்களுக்கான மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் வழங்குவதில் அமைச்சின் அர்ப்பணிப்பை பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையம் அதன் அத்தியாவசிய பணியைத் தொடர்வதை உறுதி செய்யும் அதே வேளையில், எதிர்கால இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான சவால்களுக்கு எதிராக அதன் மீள்தன்மையை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் ஊழியர்கள் மற்றும் சிகிட்சை பெற்று வரும் யுத்த வீரர்களுக்கும் உறுதியளித்தார்.