புத்தாண்டு நிகழ்வில் கூட்டு முயற்சியின் அவசியத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

ஜனவரி 01, 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று காலை (ஜனவரி 01) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புதிய ஆண்டின் பணிகள் ஆரம்பித்தல் மற்றும் அரச ஊழியர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டை மீளமைப்பதற்கான கூட்டு முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பொருளாதார மீட்சி மற்றும் தேசிய பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைந்து முன்னேற வேண்டும் என தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ஆற்றிய பங்களிப்புகளுக்காக அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயக்கொந்தா (ஓய்வு), நாட்டை மீளமைப்பதில் ஒற்றுமையும் கூட்டு பொறுப்புணர்வும் மிக முக்கியமானவை எனக் குறிப்பிட்டதுடன், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்வின் போது பிரதி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.