அமெரிக்க தூதர் பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஜனவரி 08, 2026இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேரவுள்ள, அமெரிக்க தூதர் மேதகு Julie Chung, பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 8) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பற்றி கலந்துரையாடினர். மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதில் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் வெளிச்செல்லும் தூதரின் சிறப்பான பங்களிப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார், இச்சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.
அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் Matthew Matthew House உம் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.