பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு ICU படுக்கைகள் அன்பளிப்பு
ஜனவரி 09, 2026பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (ஜனவரி 09) அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு நான்கு (04) ICU படுக்கைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இது அங்குள்ள முக்கியமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
அவ்வைத்தியசாலையில், பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வின் போது இப்படுக்கைகள் கையழியளித்து வைக்கப்பட்டன. இந்த நன்கொடை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை பராமரிக்க மருத்துவமனையின் திறனை மேம்படுத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி தேசிய சுகாதார அமைப்பை ஆதரிப்பதிலும் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.