யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘வீரு சிசு பிரதீப்ப’ புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன
ஜனவரி 13, 2026பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 13) நடந்த ஒரு நிகழ்வில் யுத்த வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு விரு சிசு பிரதீப்ப கல்வி புலமைப்பரிசில் வழங்கப்பட்டடன.
இவ்விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். நிகழ்வுக்கு வருகை தந்த பிரமுகர்களை ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹொன (ஓய்வு) வரவேற்றார்.
2023/2024 கல்வியாண்டில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 119 மாணவர்களுக்கு இம்முறை புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை மறைந்த மற்றும் ஊனமுற்ற போர்வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 1,343 மாணவர்கள் நிதி மற்றும் கல்வி உதவிகளை பெற்றுள்ளம்ன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மாணவர்களின் கல்வித் திறமையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தேசத்தின் துணிச்சலான படைவீரர்களின் வாழும் மரபு என்று அவர் மாணவர்களை விவரித்தார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அவர்கள் பெற்ற வெற்றியானது அவர்களின் உறுதி மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆதரவை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தொடர்ச்சியான நலனை உறுதி செய்வதில் பாதுகாப்பு அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், தொழில்முறை சாதனைகளின் மிக உயர்ந்த நிலைகளை அடைய இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் தனது உரையில், தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதில் தேசிய பாதுகாப்பு நிதியத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். கல்வி என்பது எதிர்காலத்தில் சிறந்த முதலீடாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார், இப்புலமைப்பரிசில் திட்டம் நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களை அங்கீகரிப்பதாக உள்ளது என்றார். புலமைப்பரிசில் பெறுபவர்களை ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் வலுவான தேசியப் பொறுப்புணர்வோடு தங்கள் கல்வி அபிலாஷைகளைத் தொடர அவர் ஊக்குவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.