இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்

ஜனவரி 14, 2026

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். 
 
இந்தச் சுமூக சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் குறிப்பாக முக்கியத்துவம் அளித்து, பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இச்சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இச்சந்திப்பின் போது சமூகமளித்திருந்தார்.