DSCSC யின் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஜனவரி 16, 2026

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) தளபதி, மேஜர் ஜெனரல் K. W. ஜயவீர, இன்று (ஜனவரி 16)  பாதுகாப்பு பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில்  மரியாதை நிமித்தம்  சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது, இலங்கை இராணுவத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காகவும், மதிப்புமிக்க பங்களிப்புகளுக்காகவும் மேஜர் ஜெனரல் ஜயவீரவை பிரதி அமைச்சர் பாராட்டினார். அவரது தலைமைத்துவத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதி அமைச்சர், அவரின்  தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியை புதிய உயரங்கள் மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் என தனது உறுதியான நம்பிக்கையை தெரிவித்தார்.