இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்
ஜனவரி 20, 2026இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, மூன்று நாட்கள் நீடித்த சர்வதேச தரத்திலான இந்தப் போட்டி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் சைக்கிள் ஓட்டுநர்கள் போட்டியிட்டு, அவர்களின் சிறப்பான சகிப்புத்தன்மை, வேகம் மற்றும் தந்திரோபாய திறமையை வெளிப்படுத்தினர்.
2026 ஜனவரி 16 முதல் 18 வரை நடத்தப்பட்ட இந்த சுற்றுப் போட்டி, மூன்று கடினமான கட்டங்களாக சுமார் 448 கிலோமீட்டர் மொத்த தூரத்தை உள்ளடக்கியதாக காணப்பட்டதுடன், இலங்கையின் முக்கிய நகரங்களையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசங்களையும் ஒன்றிணைத்தது.
2026 ஜனவரி 16 அன்று நடைபெற்ற ஆரம்ப கட்டத்தில், சைக்கிள் வீரர்கள் கொழும்பு (லேக் ஹவுஸ்) முதல் கண்டி (கன்னொருவ) வரை 105 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் போட்டியிட்டனர். இந்த கட்டத்தில் ஏற்றம்–பள்ள நில அமைப்பு கொண்டதாக காணப்பட்டது. 2026 ஜனவரி 17 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டம், கண்டி முதல் அனுராதபுரம் வரை 135.5 கிலோமீட்டர் தூரம் நீண்டதாக இருந்தது. 2026 ஜனவரி 18 அன்று நடைபெற்ற இறுதி மற்றும் மிக நீண்ட கட்டம், அனுராதபுரம் முதல் புத்தளம் வீதி வழியாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை 208 கிலோமீட்டர் சவாலான தூரத்தை உள்ளடக்கியதாக போட்டிக்கு பரபரப்பான நிறைவைக் கொடுத்தது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சைக்கிள் வீரர் சிப்பாய் ஏ.டி.எஸ் பெரேரா அவர்கள் லங்கா சவாரி 2026 போட்டியின் மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். போட்டியின் முழு காலப்பகுதியிலும் தனது அனைத்துத் திறன்களையும் வெளிப்படுத்திய அவர், பெருமைமிக்க கிங் அப் மௌன்டன் பட்டத்தையும் சிறந்த ஸ்பிரிண்டர் விருதையும் ஒருசேர கைப்பற்றினார். போட்டி முழுவதும் அவரது அனைத்து திறன்களையும் வெளிப்படுத்திய இரட்டைப் போட்டி இதுவாகும். லங்கா சவாரி 2026 இன் ஒட்டுமொத்த முதலிடத்தையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இராணுவத்தின் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.டபிள்யூ.எம். சந்தருவன் பிந்து அவர்கள் மூன்றாவது இடத்தையும், அணித் தலைவராகப் பணியாற்றிய இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஆர்.டி.சி. தயானந்தன மூன்றாம் கட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தனிப்பட்ட சாதனைகளுக்கு மேலதிகமாக, இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுதல் அணி சிறந்த அணி விருதையும் வென்றது. இது, போட்டி முழுவதும் அவர்களின் சிறந்த குழுப்பணி, நிலைத்தன்மை மற்றும் தந்திரோபாய வலிமையை பிரதிபலிப்பதாகும். இந்த அணியில் ஆறு சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே, எம்.பி., இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ தினிந்து சமன் ஹென்நாயக்க, எம்.பி., மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர் இறுதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நன்றி - www.army.lk