இரண்டு ஓமான் மற்றும் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை
ஜனவரி 22, 2026ஓமான் ரோயல் கடற்படை மற்றும் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று (ஜனவரி 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
ஓமான் கடற்படைக் கப்பலான AL SEEB மற்றும் இந்தோனேசிய கடற்படைக் கப்பலான KRI SULTAN ISKANDAR MUDA– 367 ஆகியவை விநியோக தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.
நாட்டிற்கு வந்தடைந்த இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினால் (SLN) பாரம்பரிய கடற்படை வரவேற்பு அளிக்கப்பட்டது.
90.7 மீட்டர் நீளமுள்ள சிக்மா-வகுப்பு கொர்வெட் ரக கப்பலான KRI SULTAN ISKANDAR MUDA – 367 ன் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Annugerah Anurullah, கடமையாற்றுவதுடன், 75 மீட்டர் நீளமுள்ள AL SEEB ன் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கொமாண்டர் Hamad bin Mohammed Aldarmaki கடமையாற்றுகிறார்.
இலங்கை கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, இரு கப்பல்களின் குழுவினரும் இலங்கை விஜயத்தின் போது பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.