ஐ.நா. பணிக்காக 11வது இலங்கை விமானப்படை பிரிவு செல்லும் வேளை 10வது
விமானப்படை பிரிவு நாடு திரும்பியது

ஜனவரி 23, 2026

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் (MINUSCA) ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின் (SLAF) 11வது குழு கடந்த 21ஆம் (ஜனவரி) திகதி சென்றதுடன் அந்நாட்டில் ஒரு வருட சேவையை நிவர்த்தி செய்த 10வது விமானப்படை குழு நாடு திரும்பியது.
 
விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, 11வது குழுவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும், ஐந்து விமானப் பெண் பணியாளர்கள் உட்பட 88 விமானப்படை பணியாளர்களுக்கு அடங்கியுள்ளன. இந்தக் குழுவிற்கு குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே தலைமை தாங்குகிறார். இக்குழு ஐ.நா.வின் ஆணையின் கீழ் விமானப் பணிகளை மேற்கொள்வார்.
 
 டிசம்பர் 6, 2024 அன்று ஆரம்பித்த ஒரு வருட காலப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 10வது SLAF விமானப் படை குழுவின் 94 பணியாளர்கள் அதேயன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
 
10வது படை குழு அதன் சேவைக்காலத்தின் போது, அமைதி காத்தல் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவாக விரிவான விமான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் 1,500க்கும் மேற்பட்ட flying hours காலத்தை பதிவு செய்துள்ளது. இரவு நேர நடவடிக்கைகள், அபாயகரமான சூழ்நிலைகளில் ஐ.நா. பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல மருத்துவ வெளியேற்றப் பணிகளையும் இது மேற்கொண்டது.
 
சிறந்த சேவைக்காக MINUSCAவின் படைத் தளபதியிடமிருந்து இக் குழுவினர் பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன், சிரேஷ்ட விமானிகளின் செயல்திறன் மற்றும் தலைமைத்துவத்திற்காக தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஐ.நா. கொடுப்பனவுகள் மூலம் இந்த பணியமர்தலின் மூலம் வெளிநாட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
SLAF பணிப்பாளர் நாயகம் -திட்டமிடல் எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா உட்பட சிரேஷ்ட SLAF அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்செல்லும் குழுவினரை வழியனுப்பியதுடன் நாடு திரும்பும் குழுவினரை வரவேற்கவும் சமூகமளித்திருந்தனர் என SLAF ஊடகம் மேலும் தெரிவிக்கின்றன.

 

Departure of 11th SLAF Contingent

   
     
   

 

 

Arrival of 10th SLAF Contingent