பாதுகாப்பு பிரதி அமைச்கிரின் தலைமையில் கம்பஹாவில் பொது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

ஜனவரி 24, 2026

மக்களுடன் நேரடி தொடர்பையும் நெருக்கத்தையும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சு ‘பொது நாள்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் மூலம் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள், மறைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து, தீர்வு பெற எளிதான தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (ஜனவரி 25) கம்பஹாவில் பொது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் முன்வைத்த வீடமைப்பு, மற்றைய நலன்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தபட்டது.

பிரதி அமைச்சர் ஒவ்வொருவருடைய வேண்டுகோள்களையும் தனிப்பட்ட முறையில் பரிசீலித்து, உரிய தீர்வுகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். முன்னாள் படைவீரர்களின் சேவையை பாதுகாப்பு அமைச்சு மிக மேலாக கருதுவதாகவும், பாதுகாப்பு படையினரின் நலன்களை உறுதி செய்வதில் அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் படைவீரர்கள் தொடர்பான விடயங்களுக்கு மேலாக, பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் பிரதி அமைச்சர் கவனத்தில் கொண்டார்.

அவை தொடர்பில் விரைவாகத் நடவடிக்கை எடுக்க உரிய அரச அதிகாரிகளிடம் பரிந்துரைத்ததுடன், நிலைத்தன்மை, உடனடி பதிலளிப்பு மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை வளர்ப்பதில் அமைச்சின் பங்கு முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.