78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது
பெப்ரவரி 04, 2026இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 4) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “Rebuilding Sri Lanka” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அத்துடன் அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு, முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய மாணவர் படையணி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் ஒரு அங்கமாக இலங்கை விமானப்படையின் Flypast அணிவகுப்பும், காலி முகத்திடலில் இலங்கை கடற்படையின் பீரங்கி வேட்டு மரியாதை அணிவகுப்பும் (Gun Salute) நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.