இத்தாலி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை
நிமித்தம் சந்தித்தார்
பெப்ரவரி 05, 2026
புதுடில்லியை தளமாக கொண்ட இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று (பிப்ரவரி 05) பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அன்பான வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் இருவரும் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன் போது, இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.